நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
மேலும், கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, தெஹியோவிட்ட, கலிகமுவ, வரகாபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்திரபுரி மாவட்டத்தில் இம்புல்பே மற்றும் பலங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நிலவி வரும் மழையுடனனான வானிலை நீடித்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
இதனால் பாறைகள் மற்றும் சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது மிகவும் அவசியம் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.