மோடி பாஜக பிரதமர் வேட்பாளர் இல்லை…! வெடித்துள்ள சர்ச்சை: அமித் ஷாவின் பதிலடி
அமித் ஷாவை பிரதமராக்க பாஜக (bjp) முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) கூறியுள்ள நிலையில் அதனை அமித் ஷா மறுத்துள்ளார்.
பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ( Amit Shah) விளக்கம் அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் (Hyderabad) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அமித் ஷா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாஜக (bjp) மீண்டும் வெற்றி பெற்றால், 5 ஆண்டுகளுக்கும் மோடியே (narendra modi) பிரதமராக தொடர்வார் என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதைப் போன்று, பாஜகவில் எந்த விதியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தொடர்வார் என்பதில், தங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கைது
இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என குற்றம் சாட்டினார்.
அத்துடன், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை தான் கேட்பதாக கெஜ்ரிவால் கூறினார்.
பாஜகவின் விதிப்படி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க முடியாது என்பதால், விரைவில் 75 வயதை எட்டவிருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷாவை பிரதமராக்க வாக்கு சேகரித்து வருவதாக கூறினார்.
அவரது இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.