காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்: தீவிரமடையும் பதற்ற நிலை
பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (Kashmir) பணவீக்கம், அதிக வரி மற்றும் மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் எழுப்பியுள்ளனர். அத்துடன், முஷாபராபாத் (Muzaffarabad) உள்பட சில மாவட்டங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் நிலைமைகளும் உருவாகியுள்ளது.
துப்பாக்கி சூடு
பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன் பேராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதோடு சில இடங்களில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை மக்கள் தாக்கியுள்ளனர்.
இதன் போது, சில காவல்துறையினர் பள்ளத்தில் தள்ளி விடப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரியொருவரும் உயிரிழந்துள்ளார்.
கண்ணீர் குண்டு
இந்த மோதல் நிலை காரணமாக சுமார் 90 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் துணை இராணுவப்படையினரும் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போராட்டத்தின் போது கண்ணீர் குண்டுகளை வீசியதில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டமையினால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்ற நிலை தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.