மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி அபாயம் குறித்து வெளியான தகவல்
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 6.4 அளவில் பதிகவாகியுள்ளது.
சுனாமி அபாயம்
அதேவேளை, இந்த நிலநடுக்கம் 75 கிமீ (46.6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெக்ஸிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் ஆனால் சேதம் குறித்த ஆரம்ப அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு மற்றும் மெக்சிகோவின் கடற்படையினர், சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.