பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது! ரிஷி சுனக் எச்சரிக்கை
புலம்பெயர்வு, AI தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak), பிரித்தானியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் மாற்றம் காண்பார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரிஷி சுனக் தமது முக்கிய உரையில், ”தேசம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை சமாளிக்க ஒரு ஆழ்ந்த அவசர உணர்வை உணர்கிறேன். செயற்கை நுண்ணறிவு, புலம்பெயர்வு மற்றும் சர்வாதிகார நாடுகளின் சவால்கள் காரணமாக பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது.
தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள், குடியேற்றத்தின் உலகளாவிய உயர்வு மற்றும் சர்வாதிகார அரசுகள் பெருகிய முறையில் ஒன்றிணைந்து செயல்படுவதால், கடந்த 30ஐ விட அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக மாற்றங்கள் ஏற்படும்.
நான் ஒரு ஆழமான அவசர உணர்வை உணர்கிறேன். அடுத்த சில ஆண்டுகள் நமது நாடு இதுவரை அறிந்திராத மிகவும் ஆபத்தன மற்றும் மாற்றமடையக்கூடியதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்தார்.
அதே சமயம் தமது தைரியமான யோசனைகளையும், செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார் என்பதையும் ரிஷி சுனக் கோடிட்டுக் காட்டினார்.