மின்சாரக் கட்டணம் குறித்த நீதிமன்ற முடிவு வெளியானது
மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிறைவு செய்துள்ளது.
இதன்படி, தீர்மானத்தை இரகசியமாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு (Speaker of Parliament) அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
14 தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு
இந்த மனுக்கள் நீதிபதிகள் விஜித் மலல்கொட (Vijith Malalgoda), ஷிரான் குணரத்ன (Shiran Gunaratne) மற்றும் அர்ஜுன ஒபேசேகர (Arjuna Obeysekera)ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) உள்ளிட்ட 14 தரப்பினரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.