இந்தோனேஷியாவில் கோர விபத்து: 11 பேர் பலி
இந்தோனேஷியாவில்(Indonesia) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பட்டமளிப்பு விழா ஒன்றிற்கு சென்று திரும்பிய பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கு காரணம்
பேருந்தின் தடுப்பில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.