சக்கரை நோயாளிகளா நீங்கள்? அப்போ இந்த கீரையை சாப்பிட மறக்காதீங்க
சக்கரை நோயாளிகள் வெந்தயக்கீரை சாப்பிடும் போது அவர்களுக்கு அதனால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தய கீரை
கீரைகள் பொதுவாக எல்லோருக்கும் நன்மையான ஒரு உணவாகும். சக்கரை நோயாளிகள் எல்லா வகையான கீரையையும் உண்ணக்கூடிதாக இருந்தாலும் வெந்தயக்கீரையை உண்ணும் போது பலன் பல மடங்காக கிடைக்கிறது.
இந்த கீரையில் ஈரச்சத்தும், புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுச்சத்துக்களும், கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. சக்கரை நோய் இருப்பவர்கள் இதை தினமும் உண்டு வந்தால் அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை அது குறைக்கும்.
வெந்தயக்கீரையை விடாமல் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வராது. உடலில் ஏற்படும் தீக்காயங்களுக்கு இந்த கீரையை அரைத்து வைத்தால் காயம் விரைவில் ஆறும்.
சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த கீரையை அரைத்து தடவலாம். இதை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்.
குடல் புண்களும் ஆறிவிடும். உடல் சூடு அதிகமாகி, தலைமுடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள், தவறாமல் சாப்பிடலாம்.