அற்புத மூலிகையான வெள்ளைப் பூண்டு: இதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!
வெள்ளைப் பூண்டின் நன்மைகளை அறியாமல், பழக்கத்தில் தான் நம்மில் பெரும்பாலானோர் பூண்டை (Garlic) அன்றாட உணர்வில் சேர்த்துக் கொள்கிறோம்.
விட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாக திகழும் வௌ்ளைப் பூண்டு கல்சியம், பொஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் பல அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டுள்ளது.
தூக்கத்தை மேம்படுத்துவது, புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது முதல் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை பூண்டு வழங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வெள்ளைப் பூண்டு அதிகரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பூண்டு இதய தசைகளை வலுவாக்கி, இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.
பூண்டில் உள்ள அல்லில்சிடின் ஆசிட், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. பூண்டில் விட்டமின்-6, துத்தநாகம், கல்சியம், நார்ச்சத்துக்கள், மக்னீசியம், செலினியம், மாங்கனீசு, உள்ளன.
இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அழற்சி பாதிப்பு, பூஞ்சை நோய் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது.
உடல் எடை
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பூண்டு உதவும். இது அதிக கலோரிகளை எரிக்கும் தன்மை உடையது.
பூண்டு உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. தினமும் தூங்கும் முன் பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடித்து வந்தால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால், கெட்ட கொழுப்புகள் கரையும்.
தூக்கமின்மைக்கு நிவாரணம்
இரவில் பூண்டு சாப்பிடுவதால் நம்பமுடியாத நன்மைகள் கிடைக்கின்றன.
தூங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். தூக்கமின்மையை எதிர்த்துப் போராடும் என்று நம்பப்படுகிறது.
பூண்டில் அல்லிசின் உள்ளது, இது மனதையும் மூளையையும் நிதானமாக்க செய்யும் ஒரு கந்தக கலவை ஆகும்.