களனியில் பாதிக்கப்பட்டுள்ள தொடருந்து சேவைகள்
களனி (Kelaniya) மற்றும் ஜா எலை (Ja-Ela) தொடருந்து நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை விளக்குத் தொகுதிகள் செயலிழந்துள்ளதன் காரணமாக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக களனி தொடக்கம் ராகமை வரையான தொடருந்து பாதையில் புகையிரதங்களின் பயணம் தடைப்பட்டுள்ளது.
பயணிகள்
இதனால் களனி தொடக்கம் ராகமை வரையான தண்டவாளப் பாதையில் பல இடங்களில் பல தொடருந்துகள் இடைநடுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ராகமை அருகே காட்டுப் பகுதியொன்றில் நிறுத்தப்பட்டுள்ள புகையிரதம் ஒன்றின் பயணிகள் பெரும் அவதியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.