சிறுவர்களிடையே பரவும் தொழுநோய் ; வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழுநோயாளிகள்
இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அத்துடன் 2023 ஆம் ஆண்டில் 1,580 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 1,580 பேரில் குழந்தைகளில் 180 பேர் உள்ளனர். மேலும் 12% குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை.
அத்துடன் இந்த ஆண்டு, 8% மாற்றுத்திறனாளி நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.