வெளிநாடொன்றில் பிரதமர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு
ஸ்லோவாக்கியாவின் (Slovakia) பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Handlova நகரில் இந்த சம்பவம் நடந்ததாக TA3 செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.