கார்கிவ் நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரைன் படைகள்: ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு!
ரஷ்ய படையின் தாக்குதலை பின் தொடர்ந்து, உக்ரைன் கார்கிவ் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கியுள்ளது.
தீவிர தாக்குதலை எதிர்கொண்ட படைகள்
உக்ரைனின் கார்கிவ்(Kharkiv) பகுதியில் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள பல கிராமங்களில் இருந்து உக்ரைன் படைகள் பின் வாங்கியுள்ளன.
கனத்த குண்டுவீச்சு காரணமாகவும், “மேலும் சாதகமான நிலைகளை” கண்டறிவதற்கான தேவையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
போர் முழுவதும், இதுபோன்ற உத்திகள் உக்ரைனின் பின்வாங்கலை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெலென்ஸ்கி பயணங்கள் ரத்து
புதுப்பிக்கப்பட்ட ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திட்டமிடப்பட்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளார்.
The situation in Kharkiv is very harsh. Russian terror is constant. Russians began using guided aerial bombs against the city almost daily.
We are looking for ways to increase Kharkiv’s ability to protect the sky. This is a task for both our military and diplomats, who are in… pic.twitter.com/UoQc9VEmTU
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 7, 2024
நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதான கடுமையான குண்டு வீச்சு காரணமாக, உக்ரைன் படைகளுக்கு படையெடுப்பை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது.
கைப்பற்றப்பட்ட பகுதிகள்
லுக்யான்ஸ்கி(Lukyantski), ஹ்லிபோக்(Hlyboke) ஆகிய கார்கிவ் பகுதிகளில் உள்ள இரண்டு குடியிருப்புகளையும், தெற்கு ஸபோரிஜ்ஜியா(Zaporizhzhia) பகுதியில் உள்ள ரோபோட்டின்(Robotyne) கிராமத்தையும் கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால், ரோபோட்டின் கிராமத்தின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் மறுத்துள்ளது.
அங்கு போரிடும் ராணுவ பிரிவின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி ஸ்கிப்ச்சிக், “ரஷ்ய படைகள் உண்மையில் புறவெளி பகுதியில் மட்டுமே உள்ளனர். கிராமத்திற்குள் இன்னும் எங்கள் நிலைகள் உள்ளன” என்று உக்ரைனிய செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.