வீட்டில் இருந்த 5 மாதக் குழந்தையை கடித்து தின்று கொன்ற நாய்… மனதை உலுக்கிய சம்பவம்
தெலங்கானாவில் வீட்டில் இருந்த 5 மாதக் குழந்தையை நாய் ஒன்று கடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில் தண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல் பாலிஷ் தொழிலாளி தத்து. இவருக்கு 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலையில் தத்துவும், அவரது மனைவியும் குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு, கடைக்குச் சென்றிருந்தனர்.
அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், தத்துவின் வீட்டிற்கு வந்துள்ளது. குழந்தை படுத்திருப்பதை கண்ட நாய், அதன் மீது பாய்ந்து, குழந்தையின் முகம், கை, கால், தலை என பல்வேறு பாகங்களை கடித்து குதறி தின்றது.
அப்போது வீடு திரும்பிய தத்துவும், அவரது மனைவியும் தங்களது குழந்தையை நாய் கடித்துக் குதறி தின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை இறந்துவிட்டதால், கடும் ஆத்திரம் அடைந்த தத்து, வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் நாயை அடித்துக் கொன்றார். இதையடுத்து, குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், நாயை வளர்த்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.