சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்: உயர்தர வகுப்புகள் ஆரம்பம்
இவ்வருடம் சாதரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதன் மூலம் அறிவித்துள்ளது.
இதன்படி, மாணவர்களுக்கான உயர்த்தர வகுப்புக்கள் எதிர்வரும் ஜூன் 04 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுற்றறிக்கை
இது தொடர்பான சுற்றறிக்கை மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்காத அதிபர்கள் தேவையான தகவல்களை அந்தந்த மாகாண மற்றும் பிரதேச அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தகவல் தேவைப்படும் மாணவர்கள், பாடசாலை நிர்வாகத்திடம் கேட்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.