;
Athirady Tamil News

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இந்தியர்கள் பலர்: வெளியான மோசடி

0

முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

மோசமான விடயம் என்னவென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பிரித்தானியா வந்த அவர்களில் பலர் நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

சுமார் 2,500 இந்தியர்கள்…
இந்தியாவில் கடனை வாங்கி, ஏஜண்டுகளுக்கு (இந்திய மதிப்பில்) ஆளுக்கு 12 முதல் 15 லட்ச ரூபாய் செலுத்தி, முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு வந்த சுமார் 2,500 இந்தியர்கள், பிரித்தானியா வந்தபோது, தங்களுக்கு வேலை தருவதாக கூறிய நிறுவனமே அங்கு இல்லை, தாங்கள் ஒரு மோசடியில் சிக்கி ஏமாந்துள்ளோம் என்பதை அறிந்துகொண்டுள்ளார்கள்.

அவர்களில் சிலருக்கு, 60 நாட்களுக்குள் முறையான உரிமம் பெற்ற ஒரு வேலை வழங்குபவரிடம் வேலைக்கு சேருங்கள், இல்லையென்றால் நாடு கடத்தப்படுவீர்கள் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அத்தனை பேருக்கு, அவர்களுக்கு ஏற்ற வேலை இல்லை!

கைகழுவிய ஏஜண்டுகள்
இந்தியாவிலிருந்து அவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பிய ஏஜண்டுகளை தொடர்புகொண்டால், உங்களை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாகக் கூறினோம், நீங்கள் இப்போது பிரித்தானியாவில் இருக்கிறீர்கள், எங்கள் வேலை முடிந்தது என அவர்கள் கைகழுவிவிடுவதாக கூறப்படுகிறது.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துவிட்டு, பிரித்தானியாவுக்கு வந்து வேலை இல்லாமல் என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்கள். இந்த விடயம் தொடர்பாக, பிரித்தானிய உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவர்லியை சந்திக்க, சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புடைய இந்திய அமைப்பொன்று அனுமதி கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.