பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்: மருத்துவ உபகரணங்களும் கையளிப்பு
பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோரின் பங்கேற்புடன் புதன்கிழமை (15) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் வைத்திய அத்தியட்சகர் ஏ.பி.மசூத், பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எம்.எம்.றஹீம், டொக்டர் எஸ்.எச்.எம்.யசீர், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைவர் டொக்டர் எப்.எம்.உவைஸ் உள்ளிட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலைக்குரிய Master plan தயாரித்தல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் குறித்தும் வைத்தியசாலைக்கு மேலதிக காணியினைப் பெற்றுக்கொள்ளல், வைத்திய நிபுணர்களை நியமித்தல் மற்றும் ஏனைய ஆளணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், நோயாளர் விடுதிகளுக்குத் தேவையான மெத்தைகள் என்பன பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிராந்திய பணிப்பாளர் ஆகியோரினால் வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது.