கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்ப உத்தரவு!
இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அமர்வு
மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில், யாழ்.மிரிசுவில் பகுதியில் 5 வயது குழந்தை உட்பட 08 பொதுமக்களை வெட்டிக் கொன்ற சம்பவத்திற்காக இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்தது கோட்டபாய அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி இருந்தமை சர்ச்சைஅயி ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.