தெருவில் கிடந்த விலையுயர்ந்த வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவன்! கௌரவித்த துபாய் அரசு
துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய சிறுவன்
துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஒன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய சிறுவனான முகமது அயன் யூனிஸ் என்பவர் தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சில நாட்களுக்கு முன்பு உலாவியுள்ளார்.
அப்போது கீழே கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை கண்டுள்ளார். இது தொடர்பாக ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையறிந்த துபாய் காவல்துறை சிறுவனிடம் இருந்து கைக்கடிகாரத்தை பெற்றுக் கொண்டனர். பின்னர், கடிகாரத்தை தொலைத்த சுற்றுலா பயணியிடம் அதை ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக துபாய் சுற்றுலா காவல் துறை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நேர்மைக்கு முன்னுதாரணமாக இருந்த இந்திய சிறுவன் முகமது அயன் யூனிஸை துபாய் போலீஸ் மனதார பாராட்டி கௌவுரவிக்கிறது” என்று கூறியுள்ளது.