கனடாவில் ஓன்லைன் சொப்பிங் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விபரங்கள் வெளியிடப்படாத கட்டணங்கள் அல்ல மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் அறவீடு செய்யப்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இணைய வழியிலான விற்பனையின் போது மறைமுகமாக கட்டணம் அறவீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் போன்ற சில வகைக் கட்டணங்களே இவ்வாறு மறைமுகக் கட்டணங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
பொருள் அல்லது சேவைக்கான விலைக்கு மேலதிகமாக வேறும் மறைமுகக் கட்டணங்கள் திடீரென சேர்க்கப்பட்டால் அது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டண அறவீட்டு முறைமை குறித்து அறியத் தருமாறு வாடிக்கையாளர்களிடம் கனடிய வியாபார போட்டி முகவர் நிறுவனம் கோரியுள்ளது.