;
Athirady Tamil News

அதிகரித்துள்ள ஓய்வூதியம் : நிதி அமைச்சு சார்பில் வெளியான அறிவிப்பு

0

மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை சந்தித்த வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை நாங்கள் அறிவித்துள்ளோம். பணம் இல்லையென்று எப்படி கூறுகின்றீர்கள். அஸ்வெசும நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல நன்மைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொடுப்பனவுகள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்று பதின்மூன்று இலட்சம் பேருக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

சமுர்த்திப் பயனாளிகள் இன்று 15,000 ரூபா பெறுகின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது.

5000 உதவி தேவைப்படுபவர்களுக்கு இன்று 7500 ரூபா வழங்கப்படும். 2000 ரூபா வயது வந்தோர் உதவித்தொகை 3000 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதியின்போது 100 ரூபாவாக இருந்த ஒரு கிலோ தேயிலை 300 ரூபாவாகவும், 400 ரூபாயாக இருந்த ரப்பர் கிலோ 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

கட்டுமானத் தொழில் கூட முற்றிலுமாக சரிந்து காணப்பட்டது. ஆனால் இன்று இவர்கள் அனைவருக்கும் வேலை இருக்கிறது. அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக நான் கூறவில்லை.

ஆனால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து ஒரு படி முன்னேறி இருக்கிறோம். எதிர்க்கட்சிகளிடமிருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பிரதாயபூர்வமானவையே தவிர அடிப்படை அற்றவை என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.