;
Athirady Tamil News

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் இலவச விமான சேவை அளித்தவர் தேடப்படும் குற்றவாளி

0

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் கட்டணமில்லா விமான சேவையை அளித்தவர் நிதி முறைகேட்டில் சிக்கி அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி என்றே தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் 3 நாட்கள்
நைஜீரிய தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் பீஸ் என்பதின் நிறுவனர் Dr. Allen Onyema. இவரே இளவரசர் ஹரி – மேகன் தம்பதி நைஜீரியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கட்டணமில்லா சேவையை அளித்தவர்.

இந்த மூன்று நாள் விஜயத்தின் போது அபுஜாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு மனநல நிகழ்வைத் துவக்கி வைக்க ஹரி – மேகன் தம்பதி சென்றிருந்தனர். மட்டுமின்றி காயமடைந்த படைவீரர்களுடன் கைப்பந்து விளையாட்டிலும் இளவரசர் ஹரி பங்கேற்றார்.

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றனர். அத்துடன் மேகன் மெர்க்கலுக்கு நைஜீரிய பாரம்பரியம் இருப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டது. நைஜீரிய பயணத்திற்காக ஹரி – மேகன் தம்பதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவையையே பயன்படுத்தினர்.

ஆனால் நைஜீரியாவில் ஏர் பீஸ் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் Allen Onyema பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்றும் 2019ல் பல மில்லியன் டொலர் நிதி முறைகேட்டில் தொடர்புடையர் என்றும் கூறப்படுகிறது.

தேடப்படும் குற்றவாளி
ஆனால் Allen Onyema மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஹரி – மேகன் தம்பதி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. விமான நிறுவன உரிமையாளர், நாட்டில் அறியப்படும் தொழிலதிபர் உள்ளிட்ட தகுதியை பயன்படுத்தி அமெரிக்க வங்கிகள் ஊடாக சுமார் 20 மில்லியன் டொலர் தொகையை மாற்றியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனியார் விமானங்களை அதிகமாக பயன்படுத்துவதாகவும் ஹரி – மேகன் தம்பதியை சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஹரி – மேகன் தம்பதி தங்களுக்கு நெருக்கமான ஒரு சிறு குழுவினருடன் 120 இருக்கைகள் கொண்ட விமானம் ஒன்றை 664 மைல்கள் பயணத்திற்கு பயன்படுத்தினர்.

ஆனால் 2019ல் இருந்தே பருவநிலை மாற்றம் தொடர்பில் ஹரி – மேகன் தம்பதி விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.