;
Athirady Tamil News

ஈரான் தலைவரின் மறைவு : நரேந்திர மோடி இரங்கல்

0

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியுமளித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா மற்றும் ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

சோகமான மறைவு
அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அத்தோடு இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இவருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் ( Dr. S. Jaishankar ) எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வானூர்தி விபத்தில்
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

சமீபத்தில் ஜனவரி 2024 இல் அவர்களுடன் நான் நடத்திய பல சந்திப்புகளை நினைவுகூருவதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த சோகத்தின் போது ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.