ஈரானில் ஐந்துநாட்கள் துக்கதினம் பிரகடனம்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei )அறிவித்துள்ளார்.
ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹி(Hossein Amir-Abdollahian) யனுடன் அதிபர் ரைசி(raisi) உயிரிழந்தார்.
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை அவர்கள் பயணம் செய்த ஹெலிகொப்டர் கீழே விழுந்ததை அடுத்து அவர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
அயதுல்லா கமேனி, “அன்புள்ள ஈரானிய மக்களுக்கு” என விழித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
63 வயதான ரைசி, உச்ச தலைவரின் சாத்தியமான வாரிசாகக் கருதப்பட்டார்.
புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான தேர்தல்
புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஜூன் 28-ம் திகதி நடைபெறும் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், துணை அதிபர் முகமது மொக்பர்(Mohammad Mokhber) இடைக்கால பதவிகளை ஏற்க நியமிக்கப்பட்டார். ஈரானின் அமைச்சரவை துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி(Ali Bagheri Kani )யை தற்காலிக வெளியுறவு அமைச்சராகவும் நியமித்துள்ளது.