;
Athirady Tamil News

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ)

0

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ)
##################################

இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பெறுமதியான உலருணவுப் பொருட்க்கள் வழங்கினார் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கௌரவப் பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா அவர்கள்.

யாழ். நீர்வேலியை சேர்ந்தவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், அதன் கௌரவப் பொருளாளர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முகாமைத்துவக்குழு ஐவரில் ஒருவரும் சிறந்த சமூக சேவையாளருமான செல்வி றம்மியா செல்வராஜா அவர்கள். தனது பிறந்தநாளை முன்னிட்டு, வவுனியா எல்லைக் கிராமமொன்றில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடியதுடன்,

இன்றையதினம் கடும் மழைக்கு மத்தியில் வன்னி எல்லைக் கிராமமொன்றில் உள்ள அக்கிராம குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களும் அக்கிராம மக்கள் சிலரும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிலருக்கு செல்வி.ரம்மியா செல்வராஜா அவர்களது நிதிப் பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி பிறந்ததின நிகழ்வை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக செயற்பாட்டாளரான திருமதி பிரியங்கா அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தார். இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளரான திருமதி பிரியங்கா அவர்களின் ஒழுங்கமைப்பில் அக்கிராம மக்கள் சிலர் ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர். குறிப்பாக ஆச்சிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. ராஜேஸ்வரன். கண்ணா, செயலாளர். திரு. கதிரேசன். சிவகரன், பொருளாளர். திரு. பூபாலசிங்கம். சங்கர் ஆகியோரும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

நிகழ்வுகளில் கலந்து கொண்டோரினால் இன்றைய நாளில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி றம்மியா செல்வராஜா வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி றம்மியா செல்வராஜா வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நறபணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
21.05 2024

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.