மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்
ஈரானின் (iran) அதிபர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி விழுந்ததில், இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossain Ameer Abdullah) ஆகியோர் நேற்று உயிரிழந்திருந்தனர்.
ஈரான் அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி தீயில் முற்றாக எரிந்து நாசமாகியதை அடுத்து பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் புலனாய்வுத்துறை
அமெரிக்க தயாரிப்பான அமெரிக்க தயாரிப்பான பெல் 212 ரக உலங்கு வானூர்தி 50 ஆண்டுகள் பழமையானது என்றும் அதன் பாகங்கள் பல தற்போது உற்பத்தி செய்யப்படுவதும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் மோசமான காலநிலையில் விமானி உலங்கு வானூர்தியை இயக்கியதன் காரணம் என்ன என்றும் ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.
இந்நிலையில், விபத்து தொடர்பில் விசாரணையை ஈரான் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் ஈரானின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் (Iran) 14 வது அதிபர் தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என்று ஈரானின் அரசாங்கம் திங்களன்று முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.