ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு-அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால்
இன்று இலங்கையில் துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த வெளி விவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அதிகாரிகள் ஹெலிக்கொப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர்
அவர்களின் மறைவை தொடர்ந்து உலகளாவிய ரீதியிலும் இலங்கை ரீதியிலும் இன்று துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச மக்கள் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தி வியாபார தளங்கள் உணவு சாலைகள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதை காண முடிந்தது.