இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய தகவல்
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் நேற்று (22.5.2025) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையிலன் படி மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கம் வீழ்ச்சி
மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ந்தும் 5 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவல்லாப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது