;
Athirady Tamil News

கிராம உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சியான தகவல்

0

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.

சேவை அரசியலமைப்பின் வரைவு கிராம அதிகாரிகளின் அங்கீகாரத்திற்காக பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கிராம உத்தியோகத்தர்களுக்கு JEAN எனப்படும் புதிய சம்பளக் குறியீடு வழங்கப்படும், மேலும் புதிய கிராம அலுவலரின் அடிப்படை சம்பளம் ரூ.28,940 தொடக்கம் ரூ. 30,140 வரையில் வழங்கப்படும்.

அமைச்சரவை அங்கீகாரம்
அத்துடன், கிராம உத்தியோகத்தர் சேவையில் தரம் 2 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 33,690 ரூபாவாகவும், தரம் 3 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 38,590 ரூபாவாகவும் உயரும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாவாகவும், மாநகர சபை எல்லைக்குள் 1500 ரூபாயிலிருந்து 3000 ரூபாவாகவும், வருடாந்த எழுதுபொருட் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.