லோக்சபா தேர்தலில் இவங்களுக்குத் தான் வெற்றி; மாறாது – பிரசாந்த் கிஷோர் உறுதி!
லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
லோக்சபா தேர்தல்
7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், என்னைப் பொறுத்த வரையில், நான் சொல்ல போகும் பதில் சில சமயங்களில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன். கடந்த ஐந்து மாதங்களாக, நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்தாலும், மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது.
கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம். அது அப்படியே திடீரென மாற்றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக செயல்படலாம். இதுதான் முடிவாக இருக்க போகிறது.
பிரசாந்த் கிஷோர் கணிப்பு
நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போது இல்லை. மோடி மீது சிலருக்கு ஏமாற்றம் இருக்கலாம், நிறைவேறாத ஆசைகள் இருக்கலாம்.
ஆனால் பரவலான கோபம் எங்கேயும் இல்லை. மோடிக்கு எதிராக வலுவான தலைவர் நிறுத்தப்படவில்லை. ராகுல் காந்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று யாரும் சொல்லி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவருடைய ஆதரவாளர்கள் அப்படிச் சொல்லலாம்.
பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக 10-20 சீட் வாங்கினால் ஆச்சர்யம். ஆனால் மொத்தமாக 60-70 சீட் கூடுதலாக வாங்குவதற்கு சான்ஸே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.