;
Athirady Tamil News

பாலஸ்தீனுக்கு அங்கீகாரம் வழங்கிய 3 ஐரோப்பிய நாடுகள்: இஸ்ரேல் எடுத்த பதிலடி நடவடிக்கை

0

பாலஸ்தீனை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை திரும்பப் பெறுகிறது.

காசாவில் தொடரும் போர்
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த இருதரப்பு மோதலில், ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகள் இந்த போருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஐ.நாவும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்கு எதிர்ப்பு
அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.

இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்று கருதப்படுவதுடன் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் அடையாள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை, காசா பகுதிகளுக்கு பல ஆண்டுகளாக அரசுரிமை கோரும் வேட்கையை உறுதிப்படுத்தும் விதமாக வந்துள்ள இந்த அறிவிப்புகளை வரவேற்பதாக பாலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் அந்த நாடுகளில் இருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் கோரிக்கை
தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கோரி வருகிறார்.

இஸ்ரேல் மறுத்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்து ஐசிசி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.