பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி
மழையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஆனால், அவரது வாழ்வு அத்துடன் முடிந்துபோகவில்லை. அவர் மீண்டும் கன் விழித்தபோது, அவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் அற்புத சக்தி கிடைத்திருந்தது.
மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்
1988ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், இளம் தாயான எலிசபெத் (Elizabeth Krohn), தனது தாத்தாவின் அஞ்சலி நிகழ்ச்சிக்காக தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது கனமழை பெய்துகொண்டிருந்திருக்கிறது. எலிசபெத் குடையைப் பிடித்துக்கொண்டிருக்க, அவரது கையில் அணிந்திருந்த மோதிரம் குடையைத் தொட்டுக்கொண்டிருந்திருக்கிறது.
அப்போது திடீரென மின்னல் அடிக்க, குடைக்கம்பி வழியாக எலிசபெத்தை மின்னல் தாக்கியுள்ளது. குடை எங்கோ சென்று விழ, குடை எங்கே என்று அவர் தேட, சற்று தொலைவில் குடை கிடப்பதை கவனித்த எலிசபெத்தின் கண்களில் வேறொரு காட்சி பட்டுள்ளது.
ஆம், அங்கே எலிசபெத் விழுந்துகிடக்கிறார். அதாவது, எலிசபெத் உயிரிழந்துவிட்டார், அவரது ஆன்மா உடலிலிருந்து வெளியேறி, தன் உடல் கிழே கிடப்பதைக் கண்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு கிடைத்த அனுபவம்
சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த மருத்துவர்கள் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அதற்குள் எலிசபெத் பல அற்புத நிகழ்வுகளை சந்தித்துள்ளார். அழகான ஒரு தோட்டத்தைக் கண்ட எலிசபெத், அங்கே மரணமடைந்த தன் தாத்தாவை சந்தித்துள்ளார். அப்போது, அடுத்து, ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாவார் என்பது போன்ற எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சில விடயங்களை எலிசபெத்துடன் பகிர்ந்துகொண்ட அவரது தாத்தா, நீ இங்கேயே இருக்க விரும்புகிறாயா, அல்லது பூமிக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறாயா என்று கேட்டுள்ளார்.
அப்போது எலிசபெத்துக்கு வயது 28. அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். ஆகவே, தான் பூமிக்கு திரும்பிச் செல்ல விரும்புவதாகக் கூற, அவரது தாத்தா, நீ பூமிக்குத் திரும்பிச் சென்றால் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும், உனக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவர் உன்னைப் பிரிந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
அற்புத சக்தி
எலிசபெத் கண் விழித்தபோது, மருத்துவமனையில் இருந்துள்ளார். அவரது கால்கள் மின்னல் தாக்கி காயமடைந்திருந்ததால், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்துள்ளார். வலி காரணமாக, பெரும்பாலும் தூங்கிக்கொண்டே இருந்த எலிசபெத்துக்கு கனவுகல் வந்துள்ளன. அவ்வளவும் பயங்கர கனவுகள்.
அதாவது, அடுத்து நடக்கவிருக்கும் விபத்துக்கள், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் அசம்பாவிதங்கள் முன்கூட்டியே எலிசபெத்துக்கு கனவில் தெரியவந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட விமான விபத்து நடக்கவிருப்பதைக் கனவில் கண்ட எலிசபெத், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். தான் எப்படி அதிகாரிகளிடம் சென்று தன் கனவைச் சொல்லி, விமான விபத்து நடக்கும் என்று கூறுவது, அப்படியே சொன்னாலும், தான் சொன்னபடியே நடந்துவிட்டாலும், தன்னையே அதிகாரிகள் குற்றம் சொல்லுவார்களோ என பயமும் ஏற்பட்டுள்ளது அவருக்கு.
இப்படி பல்வேறு எண்ணங்களால் குழப்பமடைந்திருந்த நிலையில், அவரது தாத்தா கூறியதுபோலவே, எலிசபெத்துக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது, பின்னர் அவரது கணவர் விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். அதேபோல, ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாகியுள்ளார்.
பின்னர் தனது கனவுகள் குறித்து பகிர்ந்துகொள்ளத் துவங்கியுள்ளார் எலிசபெத். தான் அவற்றைக் குறித்து பேசப் பேச, தனக்கு பயங்கர கனவுகள் வருவது குறையத் துவங்கியுள்ளதைக் கவனித்துள்ளார் எலிசபெத். இப்போதும் தனது அனுபவங்களை பகிர்ந்துவருகிறார் அவர்.
எலிசபெத்தைப் போலவே, தனது கண் பார்வையை இழந்த பின்னரே தனது முதல் கணிப்பை கணித்த பாபா வங்கா, தான் காணாமல் போனபோதுதான் தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.
பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபா வங்காவை, அவரது குடும்பத்தினர் பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.