;
Athirady Tamil News

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

0

கொரோனாவை (COVID-19) விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் என உலக சுகாதார அமைப்பினர் பெயரிட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) முதலாளி டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) , ‘Disease X’ க்கு உலகம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

வைரஸ் தொற்றுக்கள்
இந்நிலையில், உலகத் தலைவர்கள் இந்த ஆண்டின் ஒரு பகுதியை அடுத்த தொற்றுநோய்க்கான தயாரிப்பு பற்றி விவாதித்துள்ளனர்.

இதன்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட 20 மடங்கு அதிகமான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்றுக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

மனித செயற்பாடு
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தில் டிஸீஸ் எக்ஸ் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக விலங்குகளின் வாழ்விடங்களில் மனித செயற்பாடு அதிகரிப்பதன் காரணமாக இவ்வறான தொற்று நோய்கள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்..

காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோய்க்கான தயார்நிலை செயல் இயக்குனர் வைத்தியர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.