;
Athirady Tamil News

விமான இயந்திரத்தில் சிக்கிய நபர்… பயணிகள் கண் முன்னே நடந்த கோர சம்பவம்

0

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பயணிகள் கண் முன்னால் அடையாளம் தெரியாத நபர் விமான இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரில் பார்த்த பயணிகள்
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான KLM Cityhopper பயணிகள் விமானத்திலேயே குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதில் விமான ஊழியர்களும் பயணிகளும் இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் விமான இயந்திரத்தில் சிக்கிய நபர் பயணியா அல்லது விமான நிலைய ஊழியரா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

வெளியான காட்சிகளில், அவசர உதவி சேவையினர் தற்போது சம்பவம் நடந்த பகுதியில் சூழ்ந்துள்ளனர். டென்மார்க் நோக்கி புறப்பட தயாரான KLM விமானத்திலேயே தொடர்புடைய விபத்து நேர்ந்துள்ளது.

திடீரென்று அலறல் சத்தம்
இயக்கத்தில் இருந்த விமான இயந்திரத்தில் நப்ர் ஒருவர் சிக்கி மரணமடைந்துள்ளார் என்றே முதற்கட்ட தகவல் வெளியானது. தற்போது ராயல் ராணுவ பொலிசார் தொடர்புடைய சம்பவத்தில் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மொத்தம் 104 பயணிகளுடன் உள்ளூர் நேரப்படி 2.25 மணிக்கு அந்த விமானம் புறப்பட்ட தயாராகியுள்ளது. திடீரென்று அலறல் சத்தம் கேட்டதாகவும், உடனையே இயந்திரத்தில் இருந்து புகை எழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.