;
Athirady Tamil News

மருத்துவர்கள் பற்றாக்குறை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

0

இலங்கையில் (Sri lanka) போதிய மருத்துவர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு உரிய தரப்பினர் அனுமதி வழங்காவிட்டால் வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலையேற்படும் என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க (Shamil Wijesinghe) தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறையில் நெருக்கடி
மருத்துவமனைகளிற்கு நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவ துறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அதிக மருத்துவர்களை உருவாக்கவேண்டும், பயிற்றுவிக்கவேண்டும், வசதிகளை அதிகரிக்கவேண்டும் என அதிபர் தெரிவித்துவருகின்ற போதிலும் புதிய மருத்துவர்களை உருவாக்கினாலும் அவர்களிற்கு நாட்டில் வேலை வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியமனம் பெறக் காத்திருக்கும் மருத்துவர்கள்
1390 மருத்துவர்கள் தங்கள் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக 8 மாதங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. அத்துடன் நோயாளருக்கு உரிய சேவையை வழங்க முடியாமல் தடுமாறும் மருத்துவமனைகளிற்கு உதவக்கூடிய மருத்துவர்களின் பரிதாபமான துரதிஸ்டவசமான நிலை இது என தெரிவித்தார்.

நியமனங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை அறிந்தும் தொடர்புபட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.