கனடியர்களுக்கு இவ்வளவு தொகை கடனா!
கனடியர்கள் பாரிய அளவு கடன் தொகையை செலுத்த வேண்டி இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
ட்ரான்ஸ் யூனியன் என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனம், அடகு கடன் மற்றும் கடன் அட்டை போன்றவற்றிற்காக செலுத்தப்பட வேண்டிய மொத்த கடன் தொகை 2.4 ட்ரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் கடன் அட்டை பயன்படுத்தும் கனடியர்களில் 10 வீதமானவர்கள் மாதாந்த குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பணவீக்கம் போன்ற ஏதுக்களினால் இவ்வாறு கனடியர்கள் கடன்களை திருப்பி செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் செலுத்துவதற்கு சிரமங்களை எதிர் நோக்கும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக ட்ரான்ஸ் யூனியன் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் மேத்யூ ஃபேபியன் தெரிவிக்கின்றார்.
கனடிய வாடிக்கையாளர்கள் பொருளாதார சுமையை உணர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண வீக்கம் மற்றும் வட்டி வீத அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு மக்கள் கடன் சுமை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு பல குடும்பங்கள் கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவிக்கின்றார்.