;
Athirady Tamil News

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் விடுதலை

0

சிறிலங்கா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டதரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

ஊழல் தடுப்புச் சட்டம்
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் பழைய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் புதிய குற்றப்பத்திரிகையில் கையொப்பமிடுவது சட்டத்திற்கு முரணானது எனவும் உயர்நீதிமன்ற ஒம்புட்ஸ்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்த குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாகும் தன்மை சட்டத்தின் பார்வையில் சவால் செய்யப்பட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை பிரதிவாதிகளிடம் ஒப்படைக்க மறுப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.

இதன்படி பிரதிவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.