நாட்டில் அதிகரித்துள்ள முட்டை நுகர்வு: வெளியான காரணம்
நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முட்டை நுகர்வு அதிகரித்திருப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை திணைக்களம் (Department of Animal Production & Health) தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக 70 இலட்சமாக இருந்த நாளாந்த முட்டை நுகர்வு இந்த மாதம் 80 இலட்சம் ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி நாளாந்த முட்டை நுகர்வு இம்மாதத்தில் 10 இலட்சமாக அதிகரித்துள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளியான காரணங்கள்
அதிகரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை மற்றும் புரத சத்து நிறைந்த இறைச்சி, மீன் போன்றவற்றின் விலை அதிகரிப்பு ஆகியவையயே இதற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.