விண்வெளி உபகரண ஏற்றுமதிக்கு சீனா தடை
விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்புவதில் உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு கூறுகள். மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்புக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.