;
Athirady Tamil News

எனது வழிகாட்டி – தவத்தின் ஆதாரமாக உள்ளார் விவேகானந்தர்!! பிரதமர் மோடி

0

தனது வாழ்நாளில் மறக்க முடியாது விஷயம் இங்கு தியானம் செய்தது என பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

மோடி தியானம்
மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் நாட்டின் பிரதமர் மோடி. இது மீண்டும் மோடி பதவியேற்பாரா? என டெஸ்ட் வைத்துள்ள தேர்வாகும்.

10 ஆண்டு ஆட்சியை முடிக்கும் பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமர் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்துள்ளது பாஜக.

தேர்தல் வாக்குபதிவுகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் 2 நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன. இதற்கிடையில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தொடர்ந்து 45 மணி நேரம் தியானம் மேற்கொண்டவர், தனது தியானத்தை முடித்து டெல்லி திரும்பியிருக்கிறார். விவேகானந்தர் நினைவு பாறை பதிவேட்டில் தனது தவம் குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,

தூண்டுகோலான..
எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும், என் உடலின் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை உறுதி அளிக்கிறேன். ஆன்மிக மறுமலர்ச்சியின் தூண்டுகோலான விவேகானந்தர் என்னுடைய வழிகாட்டியாகவும் என் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்தபோது, ​​இந்தியாவின் மறுசீரமைப்புக்கு ஒரு புதிய திசையைப் பெற்றார். விவேகானந்தரின் லட்சியங்களைப் பின்பற்றி நமது கனவுகளின் இந்தியா வடிவம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.