ஆற்றில் கட்டியணைத்தபடி நின்ற 3 நண்பர்கள்! திடீர் வெள்ளத்தால் காத்திருந்த அதிர்ச்சி!
இத்தாலியில் 20 வயதுகளில் இருந்த மூன்று நண்பர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடாமல் பெய்த கனமழை
வடக்கு இத்தாலியில் பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நாட்டிசோன் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பான காட்சி ஒன்றில், மூன்று பேரும் (இரண்டு பெண்கள், ஒரு ஆண்) வெள்ளம் சூழ, கட்டிப்பிடித்தபடி காணப்பட்டனர்.
தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டும், கயிறு மூலம் அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.
80க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட தேடுதல் பணியில், 20 வயது மாணவி எனக் கருதப்படும் ஒரு பெண்ணும், ருமேனியாவில் இருந்து பெற்றோரை சந்திக்க வந்த 23 வயது பெண்ணின் உடலும் ஆற்றின் கீழ்ப்பகுதியில் மறுநாள் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவைச் சேர்ந்த 25 வயது காதலரான மூன்றாவது நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு, குளிர்ந்த நீர் மற்றும் வெள்ளப்பெருக்கின் திடீர் தாக்குதலே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.