ஜேர்மனியில் தொடர்மழையால் 1,300 பேர் வெளியேற்றம்
ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர்ர்ந்து பெய்துவரும் மழையால் சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது.
எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் , மக்கள் தங்குவதற்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.