;
Athirady Tamil News

ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

0

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு (Harsha de Silva) எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அறிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) நேற்று (07) பணிப்புரை விடுத்துள்ளார்.

ஹர்ஷ டி சில்வாவின் பதிவு
நேற்று (7) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர், புதிய விசா வழங்கும் முறை தொடர்பான சர்ச்சையின் விசாரணையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கூறினார்.

விஎப்எஸ் (VFS) விசாரணையின் போது நான் மிரட்டல் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தேன். இந்த சவால்கள் இருந்தபோதிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான எனது அர்ப்பணிப்பு வலுவாக உள்ளது.

முக்கிய நிதிச் சீர்திருத்தங்கள் உட்பட பலவற்றைச் சாதித்துள்ளோம்,” என்று அவர் தனது ‘எக்ஸ் தளத்தில்’ (X) பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.