வரலாற்றில் தடம்பதிக்கும் சீனாவின் கனவுத்திட்டம்: நிலவின் தென் துருவத்தில் ஆரம்பமான ஆய்வுகள்
நிலவின் தென் துருவத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சீனாவின் லாங் மார்ச்-5 விண்கலமானது அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் கனவு திட்டம் என கூறப்படும் இந்த ஆராச்சியானது, சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
சர்வதேச நாடுகள் இதுவரை தடம் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் விண்கலனை இறக்கி இந்தியா உலக சாதனையை படைத்தது.
மிகப்பெரிய திட்டம்
இதனையடுத்து நிலவின் தென் துருவத்திற்கு ரஷ்யாவும், ஜப்பானும் அடுத்தடுத்து விண்கலன்களை அனுப்பின.
ஆனால், இரு நடவடிக்கைகளும் தோல்வியடைந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக சீனா மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
அதாவது, நிலவின் மற்றொரு பகுதியிலிருந்த மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் காரணமாகவே லாங் மார்ச்-5 விண்கலத்தை சீனா நிலவில் செலுத்தியுள்ளது.
இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும்.
வென்சாங் விண்வெளி ஏவு மையம்
இதற்கான விண்கலமானது தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த மாதம் ஏவப்பட்டது.
இதில் Chang’e-6 எனும் ஆய்வுக் கருவி இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கருவி நிலவில் தரையிறங்கியுள்ளது.
இது நிலவின் மறு பக்கத்திலிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என சீனா கூறியுள்ளது.
இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர்.