கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 65 கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி வகுப்பானது உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ. தர்சினி அவர்களின் தலைமையில் நேற்று(10) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2023.12.02 இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் எழுத்து மூலம் மற்றும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், ஆட்சேர்ப்பு செய்யும் புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப காலாண்டு பயிற்சிநெறியாக இப்பயிற்சி நெறி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமென நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு (90 மணித்தியாலங்கள்) நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.