;
Athirady Tamil News

இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்…இனி ரூ.1000 உங்களை தேடி வரும் – தமிழக அரசு அறிவிப்பு!

0

தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இனி ரூ.1000..
கடந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இதனை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அறிவித்தனர்.

அதன்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக அவர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்நாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

இளைஞர்களுக்கு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டத்தை போல். மாணவர்களுக்கு இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘தமிழ் புதல்வன் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.