டைட்டன் நீர்மூழ்கிக் கலன் விபத்து: இறுதி தகவல் போலி என அம்பலம்
டைட்டன் நீர்மூழ்கிக் கலன் குழுவினரின் இறுதி தருணங்களை விவரிக்கும் பரபரப்பான பதிவு கடந்த ஆண்டு வெளியானது, ஆனால் அது முற்றிலும் கற்பனை என்று இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் செய்தி படி, அமெரிக்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஓராண்டு கால விசாரணையில் இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
கடல் ஆழத்தில் பயணம் செய்த போது உயிர் வாழ்வதற்காக கடுமையாக போராடியதாக விவரிக்கும் இந்த பதிவு ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்தை எழுப்பியது.
விசாரணை அதிகாரிகள், கப்பல் படுபாதாளத்தில் சிக்கி உயிரிழந்த குழுவினருக்கு எந்தவித முன்னறிவிப்பும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
“இது ஒரு போலி கதை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கடல் விசாரணை குழுவின் தலைவர் கேப்டன் Jason Neubauer தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன் நியூபேயர்(Neubauer) குழுவினர், கப்பல் குழுவினருக்கு எதிர்வரும் பேரழிவு பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்பதற்கான எந்த அறிகுறியையும் கண்டுபிடிக்கவில்லை.