உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: ஏமன் ஹவுதிக்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
ஏமன் நாட்டுக்குள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெரிய உளவு வலையமைப்பை அகற்றியுள்ளதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமன் நாட்டில் செயல்பட்டுவந்த உளவு அமைப்பு
ஏமன் நாட்டுக்குள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் இணைந்து ஒரு உளவு அமைப்பை அமைத்து, உள்நாட்டு மக்களையே பணிக்கமர்த்தி, ஏமன் நாட்டைக் குறித்த முக்கிய தகவல்களை சேகரித்து, அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துறையை சீர் குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததாக ஹவுதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
Yemen dismantles large US, Israeli espionage networkhttps://t.co/qbIXMwk219
— Press TV 🔻 (@PressTV) June 10, 2024
ஹவுதிக்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
அந்த உளவு அமைப்பு, உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு, அதாவது, நோய்க்கிருமிகளை நாட்டுக்குள் பரப்பி, மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ஏற்கனவே மோசமான நிலையிலிருக்கும் ஏமன் நாட்டின் சுகாதாரத்துறையை மேலும் சீர் குலைக்க முயன்றதாக ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும், அந்த உளவு அமைப்பு, ஏமன் நாட்டின் கல்வி அமைப்பையும் சீர் குலைக்க முயன்றதாகவும், பயிர்களை பாதிக்கும் பூச்சிகளைப் பரப்பி வேளாண்மையை பாதித்து, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயன்றதாகவும் ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகளுடன் தொடர்புடைய அந்த உளவு அமைப்பை தற்போது தாங்கள் கண்டுபிடித்து அகற்றிவிட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.