;
Athirady Tamil News

உலகில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை: மூன்றாம் இடத்தில் ஜேர்மனி

0

உலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், பணக்காரர்கள் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக உலக சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது.

எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை
1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் ஆய்வுக்குப் பிறகு முதன்முறையாக, பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.7 சதவிகிதம் உயர்ந்து, 86.8 டிரில்லியன் ஆகியுள்ளதாக, World Wealth Report என்னும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் ஜேர்மனி
ஜேர்மனியைப் பொருத்தவரை, பொருளாதார வளர்ச்சி சராசரிக்குக் கீழே இருந்தும், பணக்காரர்களின் சொத்து 2.2 சதவிகிதம் அதிகரித்து, 6.28 ட்ரில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. பணக்காரர்களின் எண்ணிக்கையோ 34,000 உயர்ந்து 1.65 மில்லியன் பேராகி வரலாறு படைத்துள்ளது.

அதிக பணக்காரர்கள் வாழும் நாடு பட்டியலில் ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 7.431 மில்லியன் பணக்காரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 3.777 மில்லியன் பணக்காரர்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.