;
Athirady Tamil News

பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு ” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

0

“பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு ” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறையானது நேற்று(13) யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கிறிசலிஸ் நிறுவனம நடைமுறைப்படுத்தும் “பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் “கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக இப் பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டது.

இப்பயிற்சிபட்டறை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட பதில் அரசாஙக அதிபர் அவர்கள் மாவட்ட மட்டத்தில் பால் மற்றும் பால்நிலை சார்ந்த செயற்பாட்டுக்குழு மூலம் விழிப்புனர்வினை ஏற்படுத்தி அதன் ஊடாக மாவட்டத்திலே பால் மற்றும் பால் நிலைசார் வன்முறை சார்ந்த இடைவெளியினை குறைப்பதே இச் செயலமர்வின் நோக்கம் எனவும் இது சார்பான செயற்பாடுகளில் கிறிசலிஸ் நிறுவனம் அக்கறைகாட்டி வருகின்றமைக்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார் .

மேலும் இத்தகைய பால் மற்றும் பால் நிலைசார் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது தனியே ஒரு தரப்பினராக மாவட்ட செயலகத்திலோ அல்லது பிரதேச செயலகங்களிலோ கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களினால் மட்டும் அவர்களை ஆற்றுப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதினால் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

பயிற்சிப்பட்டறையில் கிறிசலிஸ் நிறுவன மாவட்ட திட்ட முகாமையாளர் , சிரேஸ்ட திட்ட இணைப்பாளர், உதவி செயலாளர் – வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு , மாவட்ட மகளிர் அபிவிருத்தி அலுவலர் , மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மனித உரிமை ஆணைகுழுவின் பிரதிநிதி, கிறிசலிஸ் நிறுவன அலுவலர்கள், யாழ் மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், யாழ் குடிசார் சம்மேளன பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.